ஸ்ரீ லங்கா கிரிக்‍கெட் நிறு­வனம் ஏற்­பாடு செய்­துள்ள 'லங்கன் பிரீ­மியர் லீக்' இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தெராடர்  எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்­டெம்பர்  மாதம் 10 ஆம் திகதி நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

உலக நாடு­களில் நடை­பெற்­று­வரும் ஏனைய  பிரீ­மியர் லீக் தொடர்­களைப் போலவே இத்­தொ­ட­ரிலும் இலங்கை மற்­றும்­ஏ­னைய நாடு­களைச் சேர்ந்த பிர­பல்­ய­மிக்க வீரர்­களை இணைத்­துக்­கொள்­ள­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக ஸ்ரீ லங்கா கிரிக்‍கெட் நிறு­வ­னத்தின் தலைமை நிர்­வாக அதி­காரி ஆஷ்லி டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

  6 அணிகள் பங்­கு­கொள்ளும் இப்­போட்டித் தொடரின் முதல் சுற்றில் ஒவ்­வொரு அணியும் ஏனைய அணி­களை தலா இரு முறை எதிர்த்து விளை­யா­டுவர். 

அநே­க­மான போட்­டிகள் ஆர். பிரே­ம­தாஸ மைதா­னத்­திலும். மின்­னொளி வச­தி­ய­டைய தம்­பள்ளை, பல்­லே­கலை, சூரி­ய­வெவ போன்ற சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னங்­களில் நடத்­தப்­ப­ப­டும்­என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பிரீமியர் லீக் ( S.L.P.L)  எனும் பெரயரில் நடத்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.