பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதி மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.9 என பதிவாகியுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு  வெளியேறியுள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த 2008 ஆண்டு 5.2 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்திற்கு பின் 10 ஆண்டுகளில் பிரித்தானியாவை தாக்கும் பாரிய நிலநடுக்கம் இது என தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தை நியூபோர்ட், கார்டிப், மற்றும் ஸ்வான்சீ பகுதி மக்கள்  உணர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.