பண்டாரகம, ரைகம பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை தெற்கு பிரதேச பொலிஸ் நிலையத்தின் அத்தியட்சகரான குறித்த அதிகாரி, நேற்று (16) தனது கடமைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மூன்று பேர் அவர் மீது திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் குறித்த அதிகாரி நிலைகுலையவே, மூவரும் தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த நிலையில் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூவரும் பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

அவர்கள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.