வடக்கு நைஜீரியாவில் கொங்கோவில் என்ற இடத்தில்  தற்கொலைப்படை நடத்திய திடீர் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு  70க்கும் மேற்பட்டோர் படுகாயம்  அடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலைப்படை  நடத்திய இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 18 பேர் பொதுமக்கள் எனவும் ஒருவர் அந்நாட்டு இராணுவத்தை சேர்ந்தவர் என  ஊடகங்கள் தெரிவிக்கின்றன.