இந்தியா - ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் பீயார் பகுதியில் திருமண நிகழ்ச்சியொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 9 பேர் பலியாகியதோடு  20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் 2ஆவது மாடியில் உள்ள சமையல் கூடத்தில் திடீரென திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.

இந்த சிலிண்டர் வெடிப்புக்கு காரணம் ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டர் மாற்றும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.