அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி உத்தரவு

Published By: Devika

17 Feb, 2018 | 01:15 PM
image

நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அனைத்தையும், எவ்விதத் தடங்கல்களும் குறைபாடுகளும் இன்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (16) அனைத்து அமைச்சுகளினதும் செயலாளர்களைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.

“தேர்தலுக்குப் பிந்திய இக்காலப் பகுதியில், சில அமைச்சுக்கள் தாம் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடராமல் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நாட்டின் அரசியல் நிலை எவ்வாறானதாக இருப்பினும் நாட்டின் அபிவிருத்தி மீதான அரசின் திட்டங்களில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் எவ்வித மாற்றமும் இருக்காது.

“அரசியல் காரணங்கள் எவ்வாறானதாக இருப்பினும் மக்கள் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியது அமைச்சின் செயலாளர்களாகிய உங்களது கைகளிலேயே இருக்கிறது.

“எனவே, அமைச்சுகள் திட்டமிட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்விதக் குறைபாடும் தாமதமும் இன்றி மேற்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். செயலாளர்களாகிய உங்களது மட்டங்களில் மட்டுமல்லாது, திட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரிகள் மட்டம் வரை இந்தச் செய்தி சென்றடைய வேண்டும்.

“குறிப்பாக, விவசாய மற்றும் உணவு உற்பத்தித் துறைகளின் அபிவிருத்தி சீராக மேற்கொள்ளப்படவேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பருவ நிலை மாற்றங்கள் மற்றும் வறட்சி போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்.

“தேங்காய் விலை உயர்வு குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் தனி நபர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“அமைச்சு அதிகாரிகளுடன் சந்திப்புகளை செயலாளர்களாகிய நீங்கள் நடத்த வேண்டும். இதன்மூலம் உங்களது பணி எவ்விதத் தடையும் இன்றி மேற்கொள்ளப்பட முடியும்.

“எதிர்காலத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் நான் நேரடியாக விஜயம் செய்து அதன் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து ஆராயவுள்ளேன்.”

இவ்வாறு ஜனாதிபதி கூறியதாகத் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04