மஞ்சள் கடவையில் வீதியைக் கடக்க முயற்சித்த பெண், அரச பேருந்து மோதி பலியானார். இச்சம்பவம் இன்று (17) காலை கேகாலை, கரந்துபன சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடவையில் நின்றிருந்த பெண் வீதியைக் கடக்க முயற்சித்தார். அப்போது, கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து அவர் மீது மோதியது.

மோதிய வேகத்தில் தூக்கியெறியப்பட்ட அந்தப் பெண், ஸ்தலத்திலேயே பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், பேருந்து சாரதியைக் கைது செய்தனர்.

பலியானவர், அரனாயக்க, உஸ்ஸபிட்டியவைச் சேர்ந்த 68 வயதுப் பெண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதசாரிக் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றது குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.