வளை­குடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்­காட்­சி­யகம் - ஒரு நேரடி ரிப்போர்ட்

Published By: Priyatharshan

17 Feb, 2018 | 09:16 AM
image

சுற்­று­லாத்­து­றை­யையும், கேர­ளா­வையும் வேறு­ப­டுத்திப் பார்ப்­ப­தென்­பது மிகவும் கடி­ன­மா­ன­தொன்­றுதான். கேர­ளாவில் அலையாய் குவியும் சுற்­று­லாப்­ப­ய­ணிகள் அதிகம் விரும்பும் பகு­தி­களில் கும­ர­கமும் ஒன்­றா­கின்­றது. அப்­ப­கு­தியில் படகு வீடுகள், பற­வைகள் சர­ணா­லயம், நீர் சறுக்­கல்கள், கடற்­கரை விடு­திகள் என சுற்­றுலாப் பய­ணி­களை கவரும் விட­யங்கள் பல­வுள்­ளன. இவற்­றுக்கு அப்பால் அனைத்து தரப்­பி­ன­ரையும் தன்­ன­கத்தே ஈர்க்கும் தனித்­து­வ­மான விட­ய­மொன்று உள்­ளது. 

ஆம், கும­ர­கத்தின் வடக்கு பகு­தியில் அமை­தி­யான அழ­கிய இயற்கை மரங்கள் நிறைந்த பகு­தி­யொன்றின் மத்­தியில் சிறி­ய­தொரு கட்­ட­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது வளை­குடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்­காட்­சி­யகம் (bay island driftwood museum).

பாரத மண்ணில் அருங்­காட்­சி­ய­கங்­க­ளுக்கு பொது­வாக பஞ்­சமில்லை. பல­வகை ஓவி­யங்கள், புரா­தன பொருட்கள், கலா­சார விட­யங்கள், வெவ்­வே­று­பட்ட பல விட­யங்­க­ளுக்­காக ஒவ்­வொன்­றுக்கும் தனித்­த­னி­யாக ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான அருங்­காட்­சி­ய­கங்கள் காணப்­ப­டு­கின்­ற­மையை அனை­வரும் அறிந்­தி­ருக்­கின்றோம். 

ஆனால் இந்த வளை­குடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்­காட்­சி­யகம் என்ற ஆச்­ச­ரி­ய­மான பெயர்ப்­ப­ல­கை­யுடன் லோரின் பேக்கர் (கேர­ளாவின் புகழ்­பெற்ற கட்­ட­ட வடி­வ­மைப்­பாளர்) முறை­யி­லான கட்­டடத்­தினுள் இயங்கி வரும் இந்த அருங்­காட்­சி­ய­கத்தில் அப்­படி என்ன வித்­தி­யா­ச­மான விடயம் உள்­ளது என்ற கேள்வி சாதார­ண­மாக எனக்­குள்ளும் எழுந்­தது. 

அதன் விளை­வாக அந்த அருங்­காட்­சி­ய­கத்­தினுள் பிர­வே­சிப்­ப­தற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்டு உள்­நு­ழைந்­த­போது, அமை­தி­யான கட்­ட­டத்தின் வாயி­ல­ருகே அமர்ந்­தி­ருந்தார் முது­மை­யான பெண்­ம­ணி­யொ­ருவர். புன்­ன­கை­யு­ட­னான வர­வேற்­பினை அடுத்து பரஸ்­பர அறி­மு­கங்­க­ளுக்கு பின்னர் இந்த அருங்­காட்­சி­யகம் சம்­பந்­த­மான ஆச்­ச­ரி­ய­மான தக­வல்­க­ளையும், அங்­குள்ள பொருட்கள் தொடர்­பான விளக்­கங்­க­ளையும் தனது அனு­ப­வங்­க­ளையும் பகிர்ந்து கொண்டார். அவை வரு­மாறு, 

கேள்வி:- உங்­களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்:- எனது பெயர் திரு­மதி.ராஜி பொன்னூஸ். நான் ஒரு ஓய்வுபெற்ற ஆங்­கில ஆசி­ரி­ய­ராவேன். என்­னு­டைய கணவர் பி.பி.சிரியன். இந்­திய கப்­பற்­துறை அமைச்சில் சிரேஷ்ட பொறி­யி­யலா­ள­ராக கட­மை­யாற்றி ஓய்வு பெற்­றுள்ளார். தற்­போது இந்த அருங்­காட்­சி­ய­கத்­தினை நடத்­து­வதில் முழு­நே­ர­மாக ஈடு­பட்­டுள்ளேன். 

கேள்வி:- இந்த அருங்­காட்­சி­ய­கத்தில் காணப்­ப­டு­கின்ற தனித்­துவம் என்ன?

பதில்:- இந்த அருங்­காட்­சி­ய­கமே இந்­தி­யா­வி­ல் முதன்­மு­த­லாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள ஒரே­யொரு வளை­குடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்­காட்­சி­ய­க­மா­க­வுள்­ளது. இதனை இந்­திய பதி­வேட்­டி­லேயே குறிப்­பிட்­டுள்­ளார்கள். 

இங்­குள்ள மரங்கள், அவற்றின் சிதை­வுகள், மரப்­பட்­டைகள் இப்­ப­டி­யா­னவை பல்­லாண்­டு­க­ளாக கடல் நீரினுள் இருந்து அவை ஒவ்­வொரு வடி­வத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றன. மேலும் அவை கடல் நீரில் பல ஆண்­டு­க­ளாக காணப்­பட்­ட­மை­யினால் இரும்­புக்கு நிக­ரான பாரத்­தி­னையும் கொண்­டி­ருக்­கின்­றன.

கேள்வி:- இப்­ப­டி­யான பொருட்­களை சேகரிக்கும் சிந்­தனை உங்­க­ளுக்குள் எப்­படி தோற்­றம்­ பெற்­றது?

பதில்:- உண்­மையில், இற்­றைக்கு முப்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக எனது கண­வரின் பணி நிமித்­த­மாக அந்­தமான் மற்றும் நிக்­கோபார் தீவு­க­ளுக்குச் செல்ல வேண்டி ஏற்­பட்­டது. அங்கு நான் பாட­சாலை ஆசி­ரி­யையாக கட­மை­யாற்ற ஆரம்­பித்தேன். எனது கணவர் பணிக்கு சென்று விடுவார். நான் பாட­சா­லையில் இருந்து திரும்­பி­யதும் எனது குழந்­தை­களை அழைத்­துக்­கொண்டு அங்­குள்ள கடற்­க­ரை­க­ளுக்குச் செல்வேன். 

அவ்­வாறு சென்­ற­போது ஒருநாள் குழந்­தைகள் கடற்­க­ரையில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த போது முதற்­த­ட­வை­யாக கட­ல­லையில் மரக்­கி­ளை­யொன்று கரைக்கு வந்து சேர்ந்­தது. அதனை நான் எடுத்­துப்­பார்த்தேன். மிகவும் பார­மாக இருந்­த­தோடு குரங்கு போன்று அந்த மரக்­கி­ளையின் வடிவம் இருந்­தது. அதனை முதன்­மு­த­லாக நான் அங்கு தங்­கி­யி­ருந்த வீட்­டுக்கு எடுத்துச் சென்றேன். 

அதன் பின்னர் கண­வ­ருடன் இது பற்றி கலந்­து­ரை­யா­டி­விட்டு உல­கத்தில் இத்­த­கைய பொருட்கள் எப்­படி கடலில் இருந்து கிடைக்­கின்­றன என்­பது தொடர்பில் ஆராய்ந்தேன். அப்­போது தான் மரங்கள், மரங்­களின் சிதை­வுகள், கிளைகள், மரப்­பட்­டைகள் கடலில் நெடுங்­கா­ல­மாக இருந்து ஒரு கட்­டத்தில் கரை­யொ­துங்கும் போது இத்­த­கைய வடி­வங்­களை பெறு­கின்­றன என்­பதை அறிந்து கொண்டேன். அவற்றை தேடு­வ­தற்கு ஆரம்­பித்தேன்.

கேள்வி:- அத்­த­கைய பொருட்­களை கடலில் தேடு­வ­தற்கு விசே­ட­மாக எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தீர்கள்?

பதில்:- நான் பெரும்­பாலும் அந்­தமான் நிக்­கோபார் வளை­கு­டாவில் உள்ள வண்டுர், மேபெண்டர், மச்­சி­தேரா, பஞ்­சாடி உள்­ளிட்ட கடற்­க­ரை­க­ளுக்கு செல்வேன். அங்கு அடிக்­கடி பேர­லைகள் எழு­வ­துண்டு. அவ்­வாறு எழு­கின்ற சந்­தர்ப்­பங்­களில் இத்­த­கைய பொருட்கள் வெளிவர ஆரம்­பித்­தன. பேர­லைகள் எழுந்­த­வுடன் அவ­சர அவ­ச­ர­மாக சென்று இத்­த­கைய பொருட்­களை பெற்­றுக்­கொள்ள முயல்வேன். பல சம­யங்­களில் ஏமாற்­றத்­துடன் திரும்­பி­ய­து­முண்டு. இவ்­வாறு ஏறக்­குறைய மூன்று தசாப்­தங்­க­ளாக சேக­ரித்த பெருட்கள் தான் இங்கு காட்­சிப்­ப­டுத்­தி­யுள்ளேன்.

கேள்வி:- எவ்­வாறு இந்த அருங்­காட்­சி­ய­கத்­தினை ஆரம்­பித்­தீர்கள்?

பதில்:- எனது கணவர் ஓய்வு பெற்­றதும் நானும் சற்­றுக்­கா­லத்தில் ஓய்­வினை பெற்­று­விட்டேன். அதன் பின்னர் நாங்கள் 2001ஆம் ஆண்டு மீண்டும் எமது சொந்த இட­மான கும­ர­கத்­திற்கு திரும்­பினோம். கடி­ன­மான பல நிலை­மை­களில் சேக­ரித்த இப்­பொ­ருட்­களை காட்­சிப்­ப­டுத்த திட்­ட­மிட்டேன். என்­னி­டத்தில் இருந்த பணத்­தினை பயன்­ப­டுத்தி இந்தக் கட்­டடத்­தினை கட்­டினேன். அதன் பின்னர் அப்­பொ­ருட்­களை காட்­சிப்­ப­டுத்­தினேன். 

துறை­சார்ந்த நிபு­ணத்­து­வத்­துடன் நூத­ன­மான காட்­சிப்­ப­டுத்­த­லாக அமை­யாது விட்­டாலும் என்னால் இய­லு­மா­ன­வரை காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்கு முயன்­றி­ருக்­கின்றேன். முழு­நே­ர­மாக இந்த அருங்­காட்­சி­ய­கத்­தி­லேயே செயற்­பட்டு வரு­கின்றேன். இதனை பார்­வை­யி­டு­வ­தற்கு சிறி­ய­ தொ­கை­யொன்­றையே அற­விட்டு வரு­கின்றேன். அதனை சேக­ரித்தே முறை­யான ஒழுங்­கு­ப­டுத்­தல்­களை மேற்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்டு வரு­கின்றேன். 

கேள்வி:- இந்த அருங்­காட்­சி­யகம் தொடர் பில் உங்­களின் எதிர்­காலத் திட்டம் என்ன?

பதில்:- எனக்கு இப்­போது 67வய­தா­கின்­றது. இந்த அருங்­காட்­சி­ய­கத்­தினை ஆரம்­பித்த பின்னர் இந்­திய பதி­வேட்டில் அது பதி­வா­கி­யுள்­ளது. இந்­தி­யாவில் முதன்­ மு­த­லாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 2004ஆம் ஆண்டு மிகவும் புது­மை­யான சுற்­றுலா மையம் என்ற விருது கேரள அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இங்கு பல ஆராய்ச்­சி­யா­ளர்கள் வரு­கின்­றார்கள். சிலர் அனு­ம­தி­யுடன் சில ஆய்­வு­க­ளையும் நடத்­து­கின்­றார்கள். பலர் இந்த பொருட்­களை விலை­கொ­டுத்து வாங்­கு­வ­தற்கே விரும்­பு­கின்­றார்கள். என்னைப் பொறுத்­த­வ­ரையில் இந்த அருங்­காட்­சி­யகம் நிரந்­த­ரமாக தொட­ரப்­ப­ட­வேண்டும். 

இதனை எதிர்­கால சந்­த­தி­யி­னரும் அறிந்­தி­ருக்க வேண்டும். அத்­துடன் கின்னஸ் புத்­த­கத்தில் அருங்காட்சி யகம் பதிவு செய்யப்பட வேண்டும். அதுவே எனது பாரிய அவா! அந்த ஆவல் நிறைவேறும் பட்சத்தில் எனது முன்று தசாப்த உழைப்புக்கு வெற்றி கிடைத்ததாக நிறைவு கொள்வேன்.

இத்துடன் அவருடனான சம்பாஷணை நிறைவுக்கு வந்தது. அதன் பின்னர் அருங்காட்சியகத்தினை அவரு டைய விளக்க உரைகளுடன் பார்வையிட முடிந்தது. அங்கு, யேசுபிரான்,புட்பக விமானத்தில் சீதை, மீனினங்கள், பறவைகள், முதலை, பாம்பு, சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ்சந்திரபோஸ், மாற்றுத்திறனாளிக் குடும்பம், தாயும் சேயும் என பல்வேறு பட்ட வடிவங்களை காண முடிந்தது. 

அப்பொருட்கள் எந்தவொரு மாற்றத்திற்கும் உட்படுத்தப் பட்டிருக்காததோடு நிறப்பூச்சுக்களுமின்றி இயற்கையான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. வித்தியாசமான அனுபவத்துடன் தனித்துவத்தினையும் கொண்டிருக்கும் வளைகுடா தீவு மிதக்கும் மரச் சிதறல் அருங்காட்சியகம் ஆசியாவின் பொக்கிஷமே. 

( கேரளாவிலிருந்து ஆர்.ராம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45