அரசியல் குழப்பம் ! பிரதமர் பதவி குறித்து பொதுபலசேனாவின் கருத்து இதோ...

Published By: Priyatharshan

17 Feb, 2018 | 08:49 AM
image

நல்­லாட்சி அர­சாங்­கத்தின்  தற்­போ­தைய நிலைமை குறித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குழப்ப நிலையில் உள்ளார். இந்­நி­லையில் நாடு எதிர்­கொண்­டுள்ள உள்­ளக மற்றும் சர்­வ­தேச ரீதி­யி­லான நெருக்­க­டி­க­ளுக்கு   மத்­தியில் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வா­விற்கு பிர­தமர் பத­வியை வழங்­கு­வது பொருத்­த­மற்ற விடயம் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பிர­தமர் பதவி தொடர்பில் நாட்டில் இடம் ­பெற்று வரும் மாறு­பட்ட கருத்துக்கள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. 

இது குறித்து பொது­பல சேனா அமைப் பின் நிறை­வேற்று பணிப்­பாளர் டிலாந்த விதா­னகே கூறு­கையில், 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பெறு­பே­றுகள் எவரும் எதிர்­பார்க்­காத வண்ணம் கிடைக்கப் பெற்­றுள்­ளன. பிர­தேச மற்றும் நகர சபை­களின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்­கவே பாரிய செல­வு­களின் மத்­தியில் தேர்தல் இடம்பெற்­றது. தேர்தல் நடத்­து­வதில் காணப்­பட்ட நோக்கம் தற்­போது மாற்றம் அடைந்­துள்­ளது . பிர­தேச ரீதியில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக தேசிய அர­சாங்­கத்தில் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பிர­தமர் பதவி தேசிய அர­சாங்­கத்தில் குறிப்­பாக நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது . ஆனால் தற்­போது அந்த பதவி நிலையே பாரிய சிக்­கல்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது .இந்­நி­லையில் குறித்த பிர­தமர் பத­விக்கு நல்­லாட்சி அர­சாங்கம்  நிமல் சிறிபால டி சில்­வாவை பரிந்­துரை செய்­துள்­ளமை சாத்­தி­ய­மற்­ற­தாக காணப்­ப­டு­கின்­றது. உள்­ளூ­ராட்சி சபை­களின் பிர­தான நோக்கம் பிர­தேச அபி­வி­ருத்­தியை மேம்­ப­டுத்­து­வ­தாகும். ஆனால் குறித்த உள்­ளூராட்சி மன்றத் தேர் தல் முடி­வு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தேசிய அர­சாங்­கத்தில் பாரிய மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வதில் குறித்த கட்­சிகள் கவனம் செலுத்தி தேசிய அரசின் மீது தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

பிர­தமர் பதவி குறித்து யாரை நிய­மிப்­பது  என்­பது தொடர்பில் நாட்டு தலைவர் குழப்பம் அடைந்­துள்ள நிலையில் கட்­சிகள் தமது அர­சியல் நலனை மாத்­திரம் கருத்திற் கொண்டு பிர­தமர் பத­விக்கு பக்­கச்­சார்­பாக பரிந்­து­ரை­களை மேற்­கொள்­வது தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டியை மேலும் வலுப்­ப­டுத்­துவ­தாக காணப்­ப­டு­கின்­றது. பிர­தமர் பத­விக்கு பரிந்­து­ரை­களை மேற்­கொள்ளும் அர­சியல் கட்­சிகள் வெளிப்­ப­டை­யாக தேசிய நலனில் அக்­க­றை­யு­டைய  கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி  திரை­ம­றைவில்  பல்­வேறு சூழ்ச்சி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றன.

நாடு பாரிய அர­சியல் நெருக்கடியை எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் நாட்டின் தலைவர்  பிரதமர் பதவியை பொருத்தமா னவரிடம் கையளிப்பது நிகழ் கால அரசி யல் தேவையாக காணப்படுகின்றது. ஆகவே ஜனாதிபதி தீர்க்கமாக சிந்தித்து நாட்டு நலன்கருதி துரிதமான தீர்மானத்தினை மேற் கொள்வது அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43