மெக்சிகோவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 அந்நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிக்கோவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 7.2 என ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒயாசாகா நகருக்கு வடகிழக்கு திசையில் சுமார் 53 கிலோமீற்ர் தொலைவிலும், பூமிக்கடியில் சுமார் 24 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துகொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

கவுதமாலா நாட்டின் தெற்கு பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 369 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.