இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வரதட்சணைக்காக கொடுமைப்படுத்திய ‘பெண்(!)’ ஒருவரை உத்தரகண்ட் பொலிஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணா சென் (26) என்பவர் ஒரு பெண். ஆனால் தன்னை ஒரு ஆண் போலவே காட்டிக்கொண்ட அவர், முகநூல் மூலம் பெண்களுக்குத் தூண்டில் வீசியுள்ளார்.

அதில் சிக்கிய ஒரு பெண்ணை மணந்துகொண்ட கிருஷ்ணா சென், திருமணமான ஓரிரு மாதங்களிலேயே அவரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கிய கிருஷ்ணா, மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்தார்.

இதனிடையே, வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக முதல் மனைவியின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய, பொலிஸார் கிருஷ்ணாவைக் கைது செய்தனர்.

கிருஷ்ணா ஒரு பெண் என்று பொலிஸாருக்கு கிஞ்சித்தும் சந்தேகம் ஏற்படாதபோதும், அவரிடம் விசாரணை நடத்தியபோதே அவர் ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.

சிகரெட் புகைத்தும் மது அருந்தியும் ‘புல்லட்’ ரக மோட்டார் சைக்கிளை ஓட்டியும் தன்னை ஒரு ஆணாகக் காட்டிக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணா!

தமது மனைவியரிடம் முழு இருட்டிலேயே தாம்பத்தியம் நடத்திய கிருஷ்ணா, அதற்காக செயற்கைக் கருவிகளையும் பயன்படுத்தியுள்ளார்.

தற்போது நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருக்கிறார் கிருஷ்ணா!