அக்கரபத்தனை -  வேவர்லி தோட்ட சந்தியில் பெண் ஒருவரின் கழுத்திலிருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற நபர்கள் இருவரை அக்கரபத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

chain

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் மன்றாசி கல்மதுரை தோட்டத்தில் வசிப்பவர்கள் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு வருகையில் இந்த நபர்கள் மீது ஏகப்பட்ட குற்ற செயல்கள் காணப்படுவதாகவும் இவர்கள் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர்கள் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்கு பதியப்பட்டுள்ளதுடன் இன்று மாலை இவர்களை நுவரெலிய மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.