கிராண்ட்பாஸில் கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பற்றி 7 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குலசேகர தெரிவித்தார்.

மேற்படி கட்டடத்தில் திருத்த வேலைகள் மேற்கொண்டிருந்த ஒப்பந்தக்காரர்களிடமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

திருத்த ஒப்பந்தக்காரர்களின் உயரதிகாரி கிராண்ட்பாஸ் பொலிஸில் சரணடைந்த நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டபின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வனர்த்தத்தில் மரணித்த ஏழு பேரினது சடலங்களும் கொழும்பு அரச வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் முன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டன.

விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்போதும் அவர்களது நிலையும் கவலைக்கிடமானதாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.