அத்துருகிரியவில், அடையாளம் தெரியாதவர்களால் கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று (15) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அத்துருகிரிய, ஹோகந்தர கிழக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பதிரனகே நிலங்க மதுஷான் என்ற 19 வயது இளைஞரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின் தப்பிச் சென்றுள்ளனர். 

உயிருக்குப் போராடியபடி இருந்த மதுஷான் பிரதேசவாசிகளால் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது ஒரு காதல் விவகாரமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.