ஹல்ப்ஸ்டோர்ப் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகாமையில், சற்று முன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.

வாழைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 39 வயது நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர். இவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்துப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

எனினும் மக்களின் தாக்குதலால் காயமடைந்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.