இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள சஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில், சஷிகலா சிறிவர்தன (அணித் தலைவர்), சமரி அத்தப்பத்து (உப தலைவர்), யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரணசிங்க, டிலானி மனோதரா, பிரசாதனி வீரக்கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்குசூரிய, உதேஷிகா பிரபோதனி, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, நிபுணி ஹன்சிகா, ஹர்ஷிதா மாதவி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
