தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நல்லாட்சி அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு பிரதியமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அமைதியான முறையில் ஆட்சியை கொண்டு செல்லும் நிலையிலேயே உள்ளார். நாம் பேசிய சில அரசியல் இராஜதந்திர நகர்வுகளை ஊடகங்களிடம் தெரிவிக்க இயலாது.

எம்முடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை தெரிவித்தேன். 

நான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன்னர் சுஜீவ சேனசிங்கவும் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு சென்றுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி எமக்கு ஒன்றரை இலட்சம் மக்களின் ஆணை கிடைத்திருந்தது. நாம் 5 வருடங்கள் ஒன்றிணைந்து ஆட்சி செய்வதற்கு. நாம் அந்த ஒன்றிப்பை பாதுகாத்து முன்கொண்டு செல்வதற்கே தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.