அமெரிக்காவுக்­கா­ன இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதியினால்  இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் லொஸ் ஏஞ்சல்ஸ{க்கான துணைத்தூதராக இருந்த அவர், பின்னர் அமெரிக்காவுக்கான தூதுவராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

இந்த காலப்பகுதியில், தூதரக காரியாலய சீரமைப்புக்கான ஒப்பந்த வழங்கலுக்காக அவர் 2 இலட்சத்து 45 ஆயிரம் டொலர்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறிது காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜாலிய விக்ரமசூரியவிற்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.