நடப்பு அரசாங்கத்தின் கால எல்லைக்குள் பொது எதிரணி உறுப்பினர்கள் எந்தவொரு அமைச்சுப் பதவியையோ, பிரதமர் அதிகாரத்தையோ ஏற்கமாட்டனரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் அமையுமாயின் அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிப்பாரெனின், பொது எதிராணியாக பாராளுமன்றத்தில் செயற்படும் மஹிந்த தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலப்படுத்துவோமென உறுதியளித்துள்ளனர்.