தொடரைத் தீர்­மா­னிக்கும் தீர்க்­க­மான இரண்­டாது இரு­ப­துக்கு -20 போட்டி இன்று ராஞ்சி மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ள­தோடு காயம் கார­ண­மாக முதல் போட்­டியில் விளை­யா­டாத டில்ஷான் இன்­றைய போட்­டியில் கள­மி­றங்­கு­கிறார்.

இரு அணிக ளுக்கிடை­யே­யான மூன்று இரு­ப­துக்கு - 20 ஓவர் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் ஆட்­டத்தில் இந்­திய அணி அதிர்ச்­சி­க­ர­மாக தோற்­றது.

இந்­நி­லையில் இரு அணி­களும் மோதும் இரண்­டா­வது போட்­டியில், முதல் போட்­டியில் ஏற்­பட்ட தோல்­விக்கு இந்­திய அணி பதி­லடி கொடுக்­குமா அல்­லது இளம் வீரர்­களை கொண்ட இலங்­கையின் ஆதிக்கம் தொட­ருமா என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இன்­றைய போட்­டியில் இந்­திய அணி தோற்றால் தொடரை இழக்­க­வேண்­டிய நிலை ஏற்­படும். அதே­வேளை அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான தொடரில் வைட்வொஷ் செய்து, இலங்­கை­யு­ட­னான போட்­டியில் சொந்த மண்ணில் தோல்­வி­ய­டை­வது ரசி­கர்­க­ளி­டையே பாரிய விமர்­ச­னத்தை ஏற்­ப­டுத்தும். இதனால் இந்­தியா இப் போட்­டியை கட்­டாயம் வெற்­றி­கொள்ளும் முனைப்பில் உள்­ளது.

மேலும் டோனி தனது சொந்த ஊரில் விளை­யா­டு­வதால் வெற்­றியைப் பெற்று தருவார் என்ற எதிர்­பார்ப்பில் ரசி­கர்­களும் உள்­ளனர்.

இளம் வீரர்­களைக் கொண்டு கள­மி­றங்­கி­யி­ருந்த இலங்கை அணி மீது அனை­வரின் பார்­வையும் திரும்­பு­ம­ள­விற்கு முதல் போட்­டியில் பிர­கா­சித்­தி­ருந்­தது.

கசுன் ராஜித, தசுன் சானக மற்றும் துஷ்­மந்த சமிர ஆகியோர் தமது அதி­ரடி பந்து வீச்சால் இந்­தி­யாவின் அனு­பவ வீரர்­களை ஆட்டம் காண வைத்­தி­ருந்­தனர். எனவே இதே உத்­வே­கத்தில் இன்று களம் இறங்­கு­வார்கள் என்ற நம்­பிக்­கையும் உள்­ளது.

காயம் கார­ண­மாக முதல் ஆட்­டத்தில் விளை­யா­டாத டில்ஷான் இன்றைய போட்­டியில் கள­மி­றங்­கு­வது அணிக்கு மேலும் பல­மாகும்.

முதல் ஆட்­டத்தில் பெற்ற வெற்­றியால் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் உள்ள இலங்கை அணி மீண்டும் இந்­தி­யாவை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்­வத்­துடன் இருக்கும் என்­பதால் இப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் இதுவரை 7 இருபதுக்கு -20 போட்டிகளில் மோதியுள்ளதோடு 4இல் இலங்கையும் 3 இல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.