களனிவெளி ரயில் பாதை இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 4 மணிவரையில் முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணி காரணமாக இவ்வாறு ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 19ம் திகதி திங்கட் கிழமை காலை 4 மணி முதல் மீண்டும்  வழமை போன்று ரயில் சேவை இடம்பெறும் என்றும், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.