முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்தவுக்கும் இடையில்  தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.

இச் சந்திப்பு தற்போது கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்தில் இடம்பெற்று வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஆகியோரை இணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பிலேயே குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

இப் பேச்சுவார்த்தையில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினரும் சுசில் பிரேம்ஜயந்த உட்பட குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழுப்ப நிலையில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.