இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாக்கப்பட்டுள்ள இந்த 3 வருட பாடநெறி இலங்கையிலுள்ள முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களுள் ஒன்றான Diesel & Motor Engineering PLC (DIMO), மோட்டார் வாகன எந்திர மின்னணுவியல், ஜேர்மன் அங்கீகாரத்துடனான தகைமையை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வழிகோலும் வகையில் மூன்று வருட பாடநெறியொன்றை வழங்கவுள்ளது. 

ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் சான்று அங்கீகாரம் பெற்றுள்ளதுடன் இலங்கையில் இத்தகைய பாடநெறி ஒன்று வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

மோட்டார் வாகன எந்திர மின்னணுவியல் பாடநெறியானது எந்திரவியல், மின்னியல், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என நவீன மோட்டார் வாகனங்களின் அம்சங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து வழங்கும் ஒரு பாடநெறியாக அமைந்துள்ளது. 

இலங்கையில் இந்த அளவிற்கு பிரமாண்டமான ஜேர்மன் இரட்டை தொழிற்பயிற்சி முறைமை அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இரட்டை தொழிற்பயிற்சியானது தொழில் மூலமான பயிற்சி பெறுவதையும், தொழில்நுட்ப கற்கைகளையும் ஆரம்பம் முதற்கொண்டே ஒன்றாக இணைப்பதுடன், மாணவர்கள் கற்கைநெறியைப் பூர்த்தி செய்து வெளியேறும் போது, தேவையான நடைமுறைத் திறன்களை சிறப்பாக வளர்த்துக் கொண்டுள்ளவர்களாக மாறி விடுகின்றனர். 

தொழிற்துறையின் எதிர்பார்ப்பு எதுவோ அதற்கேற்றதாக மாணவர்களின் கல்வி அமைவதையும் இந்த முறைமை உறுதி செய்கின்றது. இதன் பலனாக ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் இளைஞர், யுவதிகள் மத்தியில் தொழில்வாய்ப்பின்மை தாழ்ந்த மட்டத்திலேயே ஜேர்மனியில் காணப்படுவதுடன், நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்பவியல் ஆதிக்கம் அதன் வெற்றிகரமான தொழிற்பயிற்சிக் கல்வி முறைமையின் பெரும்பங்கின் பலனாகவே அடையப்பெறப்பட்டுள்ளது. மோட்டார் வாகன எந்திர மின்னணுவியல் ஜேர்மன் சான்று அங்கீகார தகைமையைப் பெற்றுக்கொள்கின்ற பட்டதாரிகளுக்கு ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச அளவில் தாராளமான தொழில்வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறுகின்றன.

நிறுவனத்தின் அதி நவீன DIMO Academy for Technical Skills (DATS) இல் ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தின் சிறப்பு சான்று அங்கீகாரம் பெற்ற அணியால் இப்பாடநெறி நடாத்தப்படுகின்றது. Daimler AG இன் வழிகாட்டலின் கீழ் 1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட DATS, முதலாவது தடவையாக 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மோட்டார் வாகன எந்திர மின்னணுவியல் சார்ந்த பாடநெறியை வழங்கும் ஒரேயொரு பயிற்சி நிலையமாகத் திகழ்கின்றது. தொழிலின் போதான பயிற்சிகள் DIMO இன் அதி நவீன Mercedes-Benz, TATA, Bosch மற்றும் நிர்மாண பயிற்சித் தளங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. உயர் கல்வியை மேற்கொண்டும் தொடர விரும்புகின்ற நபர்களுக்கு ஜேர்மன் தகைமை வேலைத்திட்டத்தின் கீழ் சான்றிதழ் தரத்தில் உள்ளவர்கள் “Meister”மட்டத்திற்கு (அதாவது கைவினை நிபுணர், கலைமாணிப் பட்டத்திற்கு இணையானது) உயர்வதற்கு, பல்கலைக்கழகத்தில் பொறியியலில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள அல்லது ஜேர்மனியில் மேல் நிலை தொழிற்பயிற்சிக் கல்லூரியின் மூலமாக சான்று அங்கீகாரம் பெற்ற பொறியியலாளராக மாறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. 

இது தொடர்பில் DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கையில்,

“அண்மைக் காலங்களில் மோட்டார் வாகனங்கள் வழமையான தொழில்நுட்பவியலாளரின் திறன்களுக்கும் அப்பால் சிக்கல் கொண்டதாகவும்  அதி நவீன மட்டத்தையும் எட்டியுள்ளன. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த மேம்பாடு, தினசரி வளர்ச்சியடைந்து செல்வதுடன் அதன் விளைவாக தகைமை பெற்ற மோட்டர் வாகன எந்திர மின்னணுவியலாளர்களுக்கான கேள்வி உலகளாவில் பாரிய அளவில் காணப்படுகின்றது.

DIMO வழங்கும் முன்னோடி மோட்டார் வாகன எந்திர மின்னணுவியல் பாடநெறியின் மூலமாக, உயர்ந்த அளவில் நாடப்படுகின்ற திறன்கள் மற்றும் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த தனித்துவமான வாய்ப்பானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிலருக்கே கிடைக்கப்பெறவுள்ளதுடன் மோட்டார் வாகனத் தொழில்நுட்பத்தில் தீவிர ஆர்வம் கொண்ட, கடினமான இந்த தகைமை நிகழ்ச்சித்திட்டத்தில் சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக உள்ள இளைஞர்களையும் யுவதிகளையும் DIMO எதிர்பார்த்துள்ளது.” என்று குறிப்பிட்டார். 

சர்வதேசரீதியாக நன்மதிப்புப் பெற்ற நிறுவனங்களில் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள இத்தகைமை வழிகோலுவதாகவும் பட்டதாரி மாணவர்கள் புத்தாக்குனர்களாகவும் தொழில் முயற்சியாளர்களாகவும் மாறுவதற்கான வலுவூட்டலையும் அவர்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டார். 

“இலங்கையில் ‘பணி புரிவதற்கு மகத்தான இடங்களுள்’ ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற DIMO இப்பாடநெறியின் மூலமாக சிறப்பாக செயற்படுபவர்களை எமது அணியில் உள்ளிணைத்துக்கொள்ளும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

கடந்த எட்டு தசாப்தங்களாக உலகின் மிகச் சிறந்த பொறியமைப்பு வர்த்தகநாமங்களை DIMO நிறுவனம் இலங்கை மக்களுக்கு வழங்கி வந்துள்ளதுடன் ஜேர்மனிய தொழிற்துறையுடன் எப்போதும் நெருக்கமான உறவைப் பேணி வந்துள்ளது. Mercedes-Benz, Bosch, MTU மற்றும் Siemens அடங்கலாக 80 இற்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த வர்த்தகநாமங்களுடன் நீண்ட காலப் பங்குடமைகளை ஏற்படுத்தி புகழ்பெற்றுள்ளதுடன், நாளைய தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளத் தயாரான தொழில்நுட்ப தொழில்சார்ந்தவர்களை உருவாக்குவதிலும் DIMO அர்ப்பணிப்புடன் உள்ளது.

தொழிற்துறையின் முன்னோடி என்ற தனது பாரம்பரியத்தைப் பேணும் வகையில், நிறுவனத்தின் சமீபத்தைய இந்த முயற்சியானது இலங்கையில் தொழிற் பயிற்சியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பாடநெறி தொடர்பான விபரங்களை dats@dimolanka.com மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.