அழுத்தங்கள் ! தனது பதவியை இராஜிநாமா செய்தார் எத்தியோப்பிய பிரதமர்

Published By: Priyatharshan

16 Feb, 2018 | 10:48 AM
image

எத்தியோப்பிய பிரதமர் ஹெயில்மரியம் டிசலின் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக ஆளும் கட்சியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குழப்ப நிலை தீவிரமடைந்து வந்துள்ளது.

இந்த குழப்ப நிலை மற்றும் போராட்டங்கள் என்பவற்றை தடுக்கும் நோக்கில் இவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எத்தியோப்பியா, ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். 

ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆபிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இதுவாகும். இதன் தலைநகர் அடிஸ் அபாபா.

ஹெயில்மரியம் டிசலின் கடந்த 2012 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.

அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் வளர்ச்சியில் கிடைக்கும் பயன்கள் மற்றும் நன்மைகள் சாதாரண மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், எத்தியோப்பிய பிரதமர் ஹெயில்மரியம் டிசலின் நேற்று திடீரென தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

எத்தியோப்பியாவில் நிலவிவந்த குழப்பங்களுக்கு தீர்வுகாண, பிரதமர் ஹெயில்மரியம் டிசலின் நீண்ட காலமாக முயற்சி செய்துவந்தார். 

ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஹெயில்மரியம் டிசலின் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கபடும் வரை ஹெயில்மரியம் டிசலின் பிரதமர் பதவியில் நீடிப்பார் எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13