பொரு­ளா­தார அபி­வி­ருத்தி எந்த வகையில்  முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும்   வறு­மையை போக்­கு­வ­தற்­கான  வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். 1990 ஆம் ஆண்டு   இலங்­கையின் வறு­மை­ நிலையா­னது  பாரி­ய­ளவில் இருந்­த­துடன்   தற்­போது படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து    4.1 வீதத்­துக்கு        (2016 ஆம் ஆண்டு தர­வுகள்)  வந்­துள்­ளது.  

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது    கடந்த காலங்­களில் இலங்­கையில்  வறுமை ஒழிப்­புக்­காக  முன்­னெ­டுக்­கப்­பட்ட பல்­வேறு  வேலைத்­திட்­டங்கள் குறிப்­பி­டத்­தக்­க­ளவு  குறை­வ­டைந்­துள்­ள­மையை  அவ­தா­னிக்க முடி­கின்­றது. கடந்த  2013 ஆம் ஆண்டு  6.7 வீத­மாக காணப்­பட்ட வறுமை நிலை­யா­னது  தற்­போது 4.1 வீத­மாக குறை­வ­டைந்­துள்­ளது.  அதா­வது 843,913   பேர் வறு­மையில் உள்­ளனர். 

உலகில் சில நாடு­களில் மக்கள் பசியால் வாடு­வதும் பட்­டி­னியால் மாண்­டு­போ­வ­து­மான அவலம்  தொடர்ந்து   நீடிக்­கத்தான் செய்­கின்­றது. சில நாடு­களில்  தேவைக்கு அதி­க­மான உண­வுகள் வீண்­வி­ர­ய­மாக்­கப்­ப­டு­கின்றபோது   சில நாடு­களில்  மக்கள்  பசிக்­கொ­டு­மையால் வாடு­கின்ற நிலைமை காணப்­ப­டு­வது  மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. 

நாடு ஒன்றின் அபி­வி­ருத்தி எனும்­போது அது பல பரி­மா­ணங்­களை கொண்­ட­தாக அமைந்­தி­ருக்கும்.பொரு­ளா­தார வளர்ச்சி,வேலை­யின்மை குறைதல், வறு­மையை ஒழித்தல்,சமூக முன்னேற்றம் ,மக்­களின் வாழ்க்கைத் தரம் உயர்வு,முயற்­சி­யாண்மை சரி­யான முறையில் அமைதல்,  உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மேம்­ப­டுதல், மக்­களின் தனி­நபர் வரு­மானம் அதி­க­ரித்தல், சுகா­தார தரம் மேம்­ப­டுதல் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும்    ஒரு­சேர வளர்ச்­சி­ய­டை­யும்­போ­துதான்     அதனை அபி­வி­ருத்தி என்று குறிப்­பி­டலாம். ஆனால் எந்­த­வொரு நாட்­டிலும் இவை அனைத்தும் ஒரு சேர இருப்­பது அபூர்­வ­மானதா­கவே உள்­ளது. 

வறுமை அவலம் உலகில் தொடர்­வ­தற்கு அந்­தந்த நாடு­களின் பொருத்­த­மற்ற  பொரு­ளா­தார கொள்கைகள் ,வேலைத்­திட்­டங்கள்  மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் கார­ண­மாக  இருப்­ப­துடன்  உலகில் அவ்­வப்­போது  தோன்­று­கின்ற  கால­நிலை மாற்றம்  மற்றும்  பொது­வான  நிலை­மை­களும் ஏது­வாக அமை­கின்­றன. 

இங்கு வறுமை  தொடர்பில் உலக வங்கி எவ்­வா­றான  விளக்­கத்தை  தரு­கின்­றது என்று பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.   அதா­வது 1.90 டொல­ருக்கு குறை­வாக   ஒரு நாளைக்கு  பெறும்  நபர்   வறுமைக் கோட்­டுக்கு கீழ் வாழ்­வ­தாக   கணிக்­கப்­ப­டு­கின்­றது. 1990 ஆம் ஆண்டில் உலகில்  10 பேரில் நான்கு பேர்  வறு­மைக் கோட்டுக்கு கீழ் இருந்­தனர். ஆனால் அதுவே 2013 ஆம் ஆண்டில்  10 பேரில் ஒரு­வரே    வறு­மை கோட்டுக்கு கீழ்  உள்­ள­தாக   கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.  எப்­ப­டி­யி­ருப்­பினும்  இன்னும் உலகில் 767 மில்­லியன் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழேயே வாழ்­கின்­றனர் என்று  உலக வங்கி     தகவல் வெளியிட்­டுள்­ளது.  

அந்­த­வ­கையில் அபி­வி­ருத்­தி­யிலும் பொரு­ளா­தார வளர்ச்­சி­யிலும்   முக்­கிய விட­ய­மாக வறு­மையை ஒழிக்கும் செயற்­பாட்டை  முன்­னெ­டுக்­க­ வேண்டும்.  வறு­மையை  ஒழிப்­ப­தி­லேயே   நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி தங்­கி­யுள்­ளது. எனவே  அர­சாங்கம் நாட்டில் வறு­மையை ஒழிக்கும் விட­யத்தில் விசேட வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.  

அர­சாங்கம் என்­னதான்  வறுமை ஒழிப்பு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தாலும்  அதனை ஒழிப்­பது என்­பது கடி­ன­மா­கவே இருக்­கின்­றது. சர்­வ­தேச மட்­டத்­திலும் வறு­மையை ஒழிப்­ப­தற்கு பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும் அவை  கடி­ன­மா­ன­வை­யா­கவே  காணப்­ப­டு­கின்­றன.  

அந்­த­வ­கையில் 2009 ஆம் ஆண்டு  8.9 வீத­மாக காணப்­பட்ட  வறுமை வீத­மா­னது   2013 ஆம் ஆண்­டா­கும்­போது 6.7 வீத­மாக குறை­வ­டைந்­துள்­ளது. தற்­போது 4.1 வீத­மாக அமைந்­துள்­ளது.  

இலங்­கையில்  வரு­மான ஏற்­றத்­தாழ்வு அதி­க­மாக காணப்­ப­டு­வதே   வறுமை நீடிப்­ப­தற்­கான கார­ண­மாகும்.    தற்­போ­தைய நிலை­மையில்   இலங்கை   மக்­களின் தலா வரு­மா­ன­மா­னது   3,835 டொலர் என பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.  இது  மிகவும் சாத­க­மான நிலை­மை­யாகும்.  இவ்­வா­றான நிலை­மை­யிலும்  வறுமை நீடிப்­ப­தா­னது   வரு­மான ஏற்­றத்­தாழ்­வையே குறிக்­கின்­றது 

இங்கு புள்­ளி­வி­ப­ரங்­க­ளின்­படி வறுமை நிலை  நாட்டின் குறை­வ­டைந்து செல்­கின்­ற­போ­திலும் மாகா­ணங்கள் மற்றும் மாவட்­டங்­க­ளுக்­கி­டை­யி­லான வறு­மை தொடர்பான இடை­வெ­ளி­யா­னது தொடர்ந்து நீடிக்­கி­றது. மேல் மாகா­ணமே வறுமை குறைந்த மாகா­ண­மாக காணப்­ப­டு­கி­றது. அதே­வேளை வட  மாகா­ணமே வறுமை கூடிய மாகா­ண­மாக காணப்­ப­டு­கி­றது.  

தற்­போது நாம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை எடுத்து நோக்­கும்­போது, யுத்­தத்­தினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட இம் மாகா­ணங்கள் வறுமை நிலை­யிலும் தலை­வி­ரித்­தா­டு­வதை காண முடி­கின்­றது. 

வடக்கு, கிழக்கு மாவட்­டங்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் கடும் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை சந்­தித்த வண்ணம் வாழ்ந்து வரு­கின்­றனர். குறிப்­பாக மன்னார், முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மற்றும்  மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­களில் கண­வனை இழந்த விதவைப் பெண்­களை தலை­மை­யாக கொண்ட குடும்­பங்கள் அதி­க­ளவில் உள்­ளன. இந்த குடும்­பங்கள் வறு­மை­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே அர­சாங்கம் இவ்­வாறு வடக்கு, கிழக்கில் வறு­மை­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாவட்­டங்­களை அடை­யாளம் கண்டு அவர்­களை பொரு­ளா­தார ரீதியில் கட்­டி­யெ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.  யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்கைப் போன்று மலை­யகப் பகு­தி­களும் வறு­மையின் கோரத் தாண்­ட­வத்தில் சிக்கித் தவிக்­கின்­றன. 

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் வறு­மையை ஒழிப்­ப­தற்கு அர­சாங்கம் முழு மூச்­சுடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.    மேலும்  அதிகரித்துச் செல்கின்ற  வறுமை நிலையை  போக்குவதற்கு  மேலும்  வேலைத்திட்டங்கள் அவசியமாகும்.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு,கிழக்கு பகுதிகள் மலையகம் மற்றும்   தென்னிலங்கையிலும் பல்வேறு  பகுதிகளில்  இவ்வாறு காணப்படுகின்ற  வறுமையை  ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இந்நிலையில்  நாட்டில் தொடரும் வறுமையானது நாட்டின் பொருளாதா ரத்தை   வாட்டி வதைக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது. எனவே  வறுமை நீடிப் பதற்கான காரணங்களை கண்டறிந்து   அதனை  போக்குவதற்கு தேவையான 

நடவடிக்கைகளை  எடுக்கவேண்டும். ஏற்கனவே கடந்த  தசாப்தத்தில் முன்னெ டுக்கப்பட்ட வேலைத்திட்டங்களினால் வறுமை குறைவடைந்துள்ளது. எனவே   அந்த நிலை  தொடரவேண்டும்.