மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை பெற்றுள்ளது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 மன்றங்களில் காத்தான்குடி தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரம், ஏறாவூர் நகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 17 ஆசனங்களை பெற்றுள்ள போதி லும் ஏனைய கட்சிகளில் இருந்து ஓரிரு உறுப்பினர்களின் ஆதரவு தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு தேவைப்படுகின்றன. அதே போன்று ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை தீர்மானிப்பதற்கு தமிழ் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. மண்முனைப் பற்று பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.

இவ்வாறு மட்டக்களப்பில் முஸ்லிம் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 9 உள்ளூ ராட்சி மன்றங்களில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங் களை பெற்றிருந்தாலும் தனித்து ஆட்சிய மைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.