உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தொங்கும் உறுப்­பி­னர்கள் என்றால் என்ன?

Published By: Robert

16 Feb, 2018 | 10:12 AM
image

இலங்கை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கலப்­பு­முறை தேர்­தல்­மு­றை­மையில் உள்­ளூராட்சித் தேர்தல் தற்­போது நடந்­து­மு­டிந்­தி­ருக்­கி­றது.

இங்கு புதுப்­புது விடயங்கள் தக­வல்கள் பொறி­மு­றைகள் மக்­க­ளுக்கு தெரி­ய­வந்­தன. சுனாமி என்­ற­சொல்லே சுனாமி இலங்­கை­யைத்­தாக்­கி­ய­பி­றகே இலங்கை மக்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது. அது­போல தொங்கு உறுப்­பி­னர்கள்  மு­றை­மையும் தற்­போது தேர்தல் முடிந்­த­ பிற்­பாடே­ தெ­ரி­ய­வந்­தது.

வர்த்­த­மா­னியில் ஒன்­றைக்­கூ­றி­விட்டு எப்­படி உறுப்­பி­னர்­க­ளைக்­கூட்­டு­வ­தென்று பலரும் கேள்­வி­யெ­ழுப்­பினர். அதற்குக் காரணம் போதிய விளக்­க­மின்­மையே.

இன்னும் பல­ருக்கு இந்த முறைமை பற்றித் தெரி­யாது. அல்­லது விளங்­க­வில்லை. அத­னைக்­க­ருத்­திற்­கொண்டு அர­சியல் பத்தி எழுத்­தாளன் அர­ச­றி­வி­யல்­பட்­ட­தாரி என்ற அடிப்­ப­டையில் இச்­சி­று­கட்­டு­ரையை எழு­து­கின்றேன்.

உள்ளூர் அதி­கார சபை­க­ளுக்­கான தேர்தல் முடி­வ­டைந்­து­விட்­டது. அரசு ஏலவே வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் உள்ளூர் அதி­கார சபைகள் ஒவ்­வொன்­றுக்கும் எத்­தனை உறுப்­பி­னர்கள் எனத்­தீர்­மா­னித்து அதற்­கேற்­பவே தேர்தல் நடை­பெற்­றது. 

இத் தீர்­மா­ன­மா­னது ஒவ்­வொரு உள்ளூர் அதி­கார சபை­­க­ளி­னதும் பரப்­ப­ளவு மற்றும் சனத்­தொ­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்டு அதன் அடிப்­ப­டையில் அம் மொத்த உறுப்­பினர் தொகையில் 60வீதம் வட்­டாரம் மூலமும் 40வீதம் பட்­டி­ய­லி­லி­ருந்து விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் தெரிவு செய்­வ­தாக எண்­ணிக்கை நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.

உதா­ர­ண­மாக ஒரு உள்ளூர் அதி­கார சபைக்கு 20 உறுப்­பி­னர்­களை (100% தெரிவு செய்­வ­தாயின் 12 பேர் (60%) வட்­டா­ரத்­தி­லி­ருந்தும் 8 பேர் (40%) பட்­டி­யலில் இருந்து விகி­தா­சார அடிப்­ப­டை­யிலும் தெரிவு செய்தல்.

இதற்­க­மை­யவே தேர்தல் நடை­பெற்­ற­போதும் முடி­வு­களில் சில உள்ளூர் அதி­கார சபை­களில் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இதுதான் தொங்கும்   உறுப்­பு­ரி­மை­யாகும்.

இவ்­வா­றாக  இம்­முறை இலங்­கையில் 200 தொங்கு உறுப்­பி­னர்கள் வழங்­கப்­பட்­டுள்­ளனர்.

இது எப்­படி நிகழ்ந்­தது எனப் பார்ப்போம். 

உதா­ர­ண­மாக காரை­தீவு பிர­தேச சபைக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 11 ஆகும். இதை 100வீதமாக எடுத்தால் வட்­டா­ரங்­களில் இருந்து 7 பேர் 60% தெரிவு செய்­யப்­படல் வேண்டும். மிகுதி 4  பேர் 40% அளிக்­கப்பட்ட வாக்­கு­களின் விகி­தா­சா­ரத்­திற்கு ஏற்ப பட்­டி­யலில் இருந்து தெரிவு செய்­யப்­பட வேண்டும். இதுவே தேர்தல் நியதி.

தேர்­தலில் வட்­டாரத் தெரி­வா­னது ஒவ்­வொரு வட்­டா­ரத்­திலும் அதி கூடு­த­லான வாக்­கு­களைப் பெறு­பவர் தெரிவு செய்­யப்­ப­டுவார் என்­பது சட்ட ஏற்­பா­டாகும். அவ்­வாறே நிகழ்ந்­தது.

ஆனால் தகைமை பெறும் எண்­ணைக்­கொண்டு ஒவ்­வொரு கட்சி அல்­லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­கு­களின் அடிப்­ப­டையில் உறுப்­பு­ரிமை தீர்­மா­னிக்­கப்­படும் போது கிடைக்­க­வேண்­டிய உறுப்­பு­ரிமை எண்­ணிக்­கை­யிலும் பார்க்க வட்­டார ரீதி­யான தெரிவில் நேர­டி­யாக அதி­கமாகக் கிடைத்­தி­ருப்பின் அக் கட்­சியின் அல்­லது சுயேச்சைக் குழுவின் உறுப்­பினர் எண்­ணிக்­கையை எக்­கா­ரணம் கொண்டும் குறைக்க முடி­யாது. ஏனெனில் அவர்கள் வட்­டார ரீதி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள். 

அப்­பொ­ழுது மொத்த உறுப்­பினர் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும். அதுவே தொங்கும் உறுப்­பி­னர்கள். (OVER HANG MEMBERS).

இதனை ஓர் உதா­ரணம்  மூலம் காண்போம். 

காரை­தீவு பிர­தேச சபையை எடுத்துக் கொண்டால்......

நிர்­ண­யிக்­கப்­பட்ட உறுப்­பு­ரிமை – 11.

வட்­டா­ரங்கள் - 07 (07 பேர் வட்­டார ரீதி­யாக தெரிவு செய்­யப்­பட வேண்டும். 

விகி­தா­சார ரீதி­யான 04 பேர் தெரிவு செய்­யப்­பட வேண்டும்.)

வட்­டார ரீதி­யாக பெறப்­பட்ட விபரம் -

இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி - 04 வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து 04 உறுப்­பி­னர்கள்.

அகி­ல­இ­லங்கை மக்கள் காங்­கிரஸ் 01 வட்­டா­ரத்­தி­லி­ருந்து 01 உறுப்­பினர்.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி 01 வட்­டா­ரத்­தி­லி­ருந்து 01 உறுப்­பினர்.

சுயேச்சைக் குழு-2 01 வட்­டா­ரத்­தி­லி­ருந்து 01 உறுப்­பினர்.

ஆக 07 வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்தும் 07 பேர் நேர­டி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

நடை­பெற்­று­மு­டிந்த  தேர்­தலில் இலங்­கை ­த­மி­ழ­ர­சுக்­கட்சி 3202 வாக்­கு­க­ளையும் சுயேச்சை- 1 அணி 198 5வாக்­கு­க­ளையும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி 1684 வாக்­கு­க­ளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் 1522 வாக்­கு­க­ளையும்  அகி­ல­ இ­லங்கை மக்கள் காங்­கிரஸ் 1010 வாக்­கு­க­ளையும்  சுயேச்சை -2 அணி 829 வாக்­கு­க­ளையும் தமி­ழர்­வி­டு­த­லைக்­கூட்­டணி 280 வாக்­கு­க­ளையும் ஜ.தே.கட்சி 203 வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொண்­டன.

இப்­பொ­ழுது அளிக்­க­ப்பட்ட மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­கு­களின் அடிப்­படையில் தகைமை பெறும் எண்­ணா­னது அளிக்­க­ப்பட்ட மொத்த செல்­லு­ப­டி­யான வாக்­குகள் - 10715. இதனை 11ஆல் (மொத்த உறுப்­பினர் எண்­ணிக்கை) வகுக்­கும்­போது பெறப்­ப­டு­வது தகைமை பெறும் எண்­ணாகும்.

இங்கு ஒரு உறுப்­பி­ன­ருக்­கான தகைமை எண் 974 என அமை­கின்­றது.

மொத்த 12972வாக்­கு­களில் 10821வாக்­குகள் அளிக்­கப்­பட்­டன. அதில் 106 வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தனால் 10715வாக்­குகள் செல்­லு­ப­டி­யா­னது.

இப்­பொ­ழுது இத் தகை­மை­பெறும் எண்ணால் (974) இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி பெற்ற மொத்த வாக்­கு­களை (3202) வகுக்கும் போது 3.2874 என அமையும் இங்கு இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி பெற்ற வாக்­கு­க­ளைப்­பார்த்தால் ஆக 03 உறுப்­பி­னர்­களே பெற வேண்­டிய நிலையில் வட்­டா­ரத்தில் 04 உறுப்­பி­னர்கள் பெற்­ற­மை­யினால் 01 உறுப்­பினர் அதி­க­மாக அமை­கின்­றது. இங்கு பெற்ற உறுப்­பி­னர்­களை குறைக்க முடி­யாது.

அதற்­காக ஏனைய கட்­சிகள் பெறு­கின்ற ஆச­னங்­க­ளையும் குறைக்­க­மு­டி­யாது. என­வேதான் வட்­டா­ர­மு­றையில் குறைந்த அந்த ஒரு ஆச­னத்தை இங்கு வழங்­க­வேண்­டிய நிலை. 

ஏனைய கட்­சிகள் அல்­லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்­குகள் தகைமை எண்ணால் வகுக்­கப்­பட்டு அவர்­க­ளுக்­கு­ரிய உறுப்­பு­ரிமை இதே வகையில் வழங்­கப்­பட்­டது.

உதா­ர­ண­மாக சுயேச்சை 1 அணி பெற்ற 1985 வாக்­கு­களை தகை­மை­பெறும் எண்­ணான 974ஆல் பிரித்தால் 2.0379 வரு­கி­றது. ஆகவே இந்த அணி­யி­ன­ருக்கு 2 ஆச­னங்கள் வழங்­கப்­பட்­டது. அதே­போன்று தகை­மை­பெறும் எண்­ணுக்குள் வரு­கின்ற வாக்­கு­க­ளைப்­பி­ரித்து வரும் எண்­ணிக்கை ஆசனங்களாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி  த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 2ஆசனங்களையும் ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனங்களையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.

இதனால் தற்போது காரைதீவு பிரதேசசபையின் பிரதிநிதிகள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவே தொங்கும் உறுப்பினர்கள்   OVER HANG MEMBERS ஆவர். இதேபோன்று திருக்கோவில் பிரதேசசபைக்கான மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 16இலிருந்து 17ஆக உயர்ந்துள்ளது. மட்டுமாநகரசபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 இலிருந்து 38ஆக உயர்ந்துள்ளது. எனவே இது அடுத்துவரும் தேர்தல்களில் பழக்கப்பட்டு விடும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04