மஹிந்த ராஜ­பக்ஷ  பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்கவை தொடர்பு கொண்டு அவரை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்டாம் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

அதி­க­மான வாக்குவீதத்தை பெற்­றுக்­கொண்­டதால் நீங்கள் ஏன் பதவி விலக வேண்டும் என மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் ரணி­லிடம்  கேட்­டுள்ளார் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 

மஹிந்த ராஜ­பக் ஷ தற்­போ­தைய நிலை­மையில் ஆட்சி அமைக்­கவோ, பிர­தமர் பதவி ஏற்­கவோ முன்­வ­ர ­மாட்டார்.  காரணம் அடுத்து வரும் இரண்டு வரு­டங்கள்  மிகவும் கடி­ன­மானவை  என அவ­ருக்கு தெரியும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அர­சாங்கத்  தகவல் திணைக்­க­ளத்தில்  நேற்று நடை­பெற்ற  வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு  கருத்து  வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் ராஜித சேனா­ரட்ன மேலும் குறிப்­பி­டு­கையில்;

மஹிந்த ராஜ­பக் ஷ இந்தத் தேர்­தலில் அதி­க­மான பிர­தேச சபை­களின் அதி­கா­ரத்­தையே கைப்­பற்­றி­யுள்ளார். ஆனால் மொத்­த­மான   மக்­களின்  ஒட்­டு­மொத்த ஆத­ரவு எமது பக்­கமே இருக்­கி­றது. அதனை  தேர்தல் முடி­வுகள் நன்­றாக உணர்த்­து­கின்­றன. 

மேலும் தற்­போது  முன்னாள்  ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்சி அமைப்­ப­தற்­கான எந்த முயற்­சி­யையும் முன்­னெ­டுக்­க­மாட்டார். காரணம் அடுத்து வரும்  இரண்டு வரு­டங்கள் மிகவும் கடி­ன­மா­ன­வை­யாக இருக்கும்.   மஹிந்த ராஜ­பக் ஷ பெற்ற   கடன்­க­ளுக்­காக  அதி­க­மான மீள் கொடுப்­ப­ன­வுகள் அடுத்­த­வ­ரு­டமும் அதற்கு அடுத்த வரு­டமும் செய்­யப்­ப­ட­வேண்டும். 

எனவே அது மிகவும் கடி­ன­மாக அமையும் என  அவ­ருக்கு தெரியும்.  அதனால் தான் அவர்  ஆட்சி அமைத்து  பிர­தமர்  பத­வியை பெறும் முயற்­சி­களை   முன்­னெ­டுக்­காமல் இருக்­கிறார். 

இதே­வேளை மஹிந்த ராஜ­பக் ஷ    பிர­தமர் ரணில் விக்­கி­ர­மவை தொடர்பு கொண்டு அவரை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து  வில­க­வேண்டாம் என்று கூறி­யி­ருக்­கின்றார். அதி­க­மான வாக்கு வீதத்தை  பெற்­றுக் ­கொண்­டதால் நீங்கள் ஏன் பதவி விலக வேண்டும் என மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் ரணி­லிடம்  கேட்­டுள்ளார்.