பிரான்ஸ் நாட்டின் திரைப்படங்களை  ' பொன்ஜோர் சினிமா - 2018 ” (BONJOUR CINÉMA! 2018 ) எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இலவசமாக பார்வையிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. 

இலங்கை திரையரங்குகளுடன் இணைந்து பிரான்ஸ் மொழி திரைப்படங்கள் ஆங்கில உப தலைப்புக்களுடன்  திரையிடப்படவுள்ளன.

முதலாவதாக எதிர்வரும் 21 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் பிரானஸ் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. விருதுகள் பெற்ற திரைப்படங்களே இவ்வாறு திரையிடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

மாதம் ஒரு முறை இரவு ஏழு மணிக்கு பிரான்ஸ் திரைப்படங்கள் ARTRA Magazine, Empire Cineplex, Majestic City and Alliance Française de Kotte ஆகிய திரையரங்குகளில்  திரையிடப்படவுள்ளன.

மேலும் சிறுவர்களுக்கான விஷேட திரைப்படங்களும் கார்ட்டூன் திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன. அடுத்தடுத்த மாதமளவில் திரையிடப்படுவதற்காக விடேஷமாக சில திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவை சமீபத்தில் வெளிவந்து விருதுகள் பெற்றவை என்பது குறிப்பிடத்ததாகும். 

இம் மாதத்துக்கான திரைப்படமானது 18 வயதுக்கு மேற்பட்ட சித்திரக் கலைஞர் ஒருவருக்கும் எழுத்தாளர் ஒருவருக்குமான நட்பு பற்றியதாக வெளிவந்த பிரான்ஸ் மொழித் திரைப்படம், ஆங்கில உப தலைப்புக்களுடன் இத்  திரைப்படம் எம்பயர் சினிபிளெக்ஸில் திரையிடப்படவுள்ளது.