மோதரையில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 47 வயதுப் பெண் காயமடைந்தார்.

காரில் வந்த மர்ம நபர் ஒருவர், காரை விட்டிறங்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின், காரில் ஏறித் தப்பிச் சென்றதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நின்றுகொண்டிருந்த பெண்ணே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் அவரது நெஞ்சிலும் காலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிதாரி குறித்த தகவல்கள் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்வதற்காக தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.