ஜனா­தி­பதி நாளை விசேட அறிவிப்பு

Published By: Priyatharshan

15 Feb, 2018 | 10:11 AM
image

அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அறி­விப்பு ஒன்­றினை நாளை  விடுக்­க­வுள்ளார். ஜனா­தி­பதி மாளி­கையில் நாளை  ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­க­வுள்ள  நிலையில் இவ் அறி­விப்­பினை வெளி­யி­டுவார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

நடை­பெற்று முடிந்த உள்­ளு­ராட்சி மன்றத் தேர்­தலின் பினனர் அர­சாங்­கத்தில் பல நெருக்­கடி நிலை­மைகள் எழுந்­துள்­ளன. தேசிய அர­சாங்­கத்தின்  பிர­தான இரண்டு கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் மற்றும் புரிந்­து­ணர்­வுகள் என்­ப­வற்றின் மத்­தியில் நாளை வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­கின்றார். நாளை காலை 8.30 மணிக்கு ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெறும் இந்த சந்­திப்பின் போது அவர் விசேட கார­ணிகள் குறித்து கூறுவார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

தேசிய அர­சாங்­க­மாக தாம் இணைந்து பய­ணிப்­பது   அல்­லது தனி கட்­சி­யாக செயற்­ப­டு­வது  என்ற நிலைப்­பாட்டை எட்டும் வகையில் பிர­தான இரண்டு கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன ஆலோ­சித்து வரு­கின்­றன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி தமை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு பொது எதி­ரணி உறுப்­பி­னர்­களை சந்­தித்து முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்­ளனர். 

இந்த கலந்­து­ரை­யாடல் ஜனா­தி­பதி இல்­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. அதேபோல் ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்­டணி அமைத்து ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யாக பய­ணிப்­பது குறித்தும் கலந்­து­ரை­யாடி வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலை­யி­லேயே ஜனா­தி­பதி சில முக்­கிய தீர்­மா­னங்­களை வெளிப்­ப­டுத்­துவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

 ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின்  தலை­மையில் அர­சியல் கட்­சிகள் மற்றும் கூட்­ட­ணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற அபேட்­ச­கர்கள்  சந்­திப்­பொன்று  இன்று கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெ­று­கின்­றது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பு, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து அபேட்சகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்மையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04