கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கு வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பதினேழாம் திகதி சனிக்கிழமை 17ஆம் திகதியன்று காலை 9 மணிக்கு துண்டிக்கப்படும் நீர் வினியோகம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கே மீண்டும் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 1 முதல் 11 வரையான பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் அதேவேளை, கொழும்பு 12, 13 மற்றும் 14 பகுதிகளில் நீர் வினியோகம் வழமையிலும் குறைவான வேகத்திலேயே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.