அளுத்கமை சம்பவம் குறித்து விசாரிக்க தற்போதைய அரசு ஆணைக்குழு அமைக்காததற்குக் காரணம், சம்பவத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசில் அங்கம் வகிப்பதே என, கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.

மேலும், தம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்குக் காரணம் யார் என்பது முஸ்லிம் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதுதான் நடைபெற்று முடிந்த தேர்தலில் அவர்கள் அளித்திருக்கும் முடிவு என்று கூட்டு எதிரணி இன்று (14) விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் பொதுபல சேனா இருந்தது என்று ஒரு தவறான கருத்து மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், கண்டி மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்காத முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் எழுந்துள்ளன.

எனினும் இவ்வாறான செய்திகளை மக்கள் தீர விசாரித்து உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என கூட்டு எதிரணி கேட்டுக்கொண்டுள்ளது.