நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவு தோட்டபகுதியில் இன்று காலை 07.30 மணி அனவில் 50 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்ததில்  ழூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவ  பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டி அதிவேகத்தின் காரனமாக விபத்துக்குள்ளாகியதாகவும் இதில் பயனித்த ழூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகி பொவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருப்பதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளின் மூலம் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.