2018 ஆம் ஆண்டளவில் டை்டானிக் – II வின்  தனது கன்னி கடற்பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பாறையில் மோதி 104 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பயணித்து  உயிர் பிழைத்தவர்களிடம் தகவல்களைத் திரட்டி மறு வடிவமாக உருவாக்கப்பட்டு வரும் இக்கப்பலில் ,மூழ்கிய டை்டானிக் போலன்றி, இதில் போதிய உயிர் காக்கும் படகுகளும் மிதவைகளும் பொருத்தப்படும் என, இந்தக் கப்பலை உருவாக்கி வரும் அவுஸ்திரேலியாவின் ப்ளுஸ்டார் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூழ்கிய கப்பலைப் போன்றே இதிலும் 9 அடுக்குகள் இருக்கும் எனவும் 840 கேபின்களுடன் 2,400 பயணிகளும், 900 கப்பல் ஊழியர்களும் தங்கும் வகையில் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கப்பலில் நீச்சல் குளம், டர்கி பாத் எனப்படும் நீராவிக் குளியல், மசாஜ், ஜிம் வசதிகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.