பங்­க­ளாதேஷ் அணிக்கு எதி­ரான இரு போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொட­ரி­லி­ருந்து இலங்கை அணியின் அதி­ரடி ஆட்­டக்­கா­ர­ரான குசல் ஜனித் பெரேரா வில­கி­யுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவருக்கு பதிலாக குசல் மெண்டிஸை அணியில் இணைத்துக் கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை – பங்­க­ளாதேஷ் இரு­ப­துக்கு 20 தொடர் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இந்­நி­லையில் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நேற்று பிற்­பகல் வெளி­யிட்ட அறிக்­கையில் மருத்­து­வர்­களின் ஆலோ­ச­னைக்­க­மைய குசல் ஜனித் பெரேரா இந்தத் தொடரில் ஆட­மாட்டார் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்ற முத்­த­ரப்பு ஒருநாள் தொடரின் இரண்­டா­வது போட்­டி­யின்­போது காய­ம­டைந்த குசல் இன்னும் அந்த காயத்­தி­லி­ருந்து மீளாத கார­ணத்­தால் அவர் இந்தத் தொட­ரி­லி­ருந்து வில­கி­யுள்ளார்.

அத்­தோடு எதிர்­வரும் மார்ச் மாதம் ஆரம்­ப­மா­க­ வுள்ள முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 தொடரில் குசல் ஜனித் பெரேரா கட்­டா­ய­மாக இடம் பெற வேண்டும் என்பதால் இந்தத் தொடரிலிருந்து அவர் விலகிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.