டயலொக் றக்பி லீக் : சம்பியனானது கண்டி கழகம், வெற்றியுடன் விடைபெற்றார் மரீஜா

Published By: Priyatharshan

14 Feb, 2018 | 12:25 PM
image

டயலொக் றக்பி லீக் தொடரை மீண்­டு­மொ­ரு­முறை கண்டி கழ­கத்­திற்கு வென்­று­கொ­டுத்­து­விட்டு தனது றக்பி வாழ்க்­கை­யி­லி­ருந்­து விடை­பெற்றார் நட்­சத்­திர வீர­ரான பாசில் மரீஜா.

டயலொக் றக்பி லீக் தொடரின் நடப்பு பரு­வ­கா­லத்­திற்­கான இறுதிப் போட்­டியில் நடப்புச் சம்­பி­ய­னான கண்டி விளை­யாட்டுக் கழ­கத்­துக்கு ஹெவ்ெலாக் விளை­யாட்டுக் கழகம் அதிர்ச்சி தரும் வகையில் செயற்­பட்­டி­ருந்த போதிலும் பாசில் மரீஜாவின் இறு­தி­நேர அபா­ர ஆட்டத்­தோடு கண்டி விளை­யாட்டுக் கழகம் 30 – -28 என வெற்றி பெற்று 2017–18ஆம் பரு­வத்­துக்­கான டயலொக் றக்பி லீக் தொடரின் சம்­பியன் பட்­ட­த்தை வென்­றெ­டுத்­தது.    

கண்டி மைதா­னத்தில் நடை­பெற்ற தீர்­மா­ன­மிக்க இந்தப் போட்­டியானது இலங்கை தேசிய றக்பி அணியின் முன்னாள் தலைவர் பாசில் மரீ­ஜாவின் கழக றக்பி தொடர்­களின் பிரி­யா­விடைப் போட்­டி­யா­கவும் அமைந்­தி­ருந்­தது. 

இப்போட்­டியின் முதல் புள்­ளிகள் கண்டி அணிக்கு கிடைக்­கப்­பெற்­றன. பின்னர் பாசில் மரீஜா தனக்கு கிடைத்த இடை­வெ­ளி­களினூடாகச் சென்று போட்­டியின் இரண்­டா­வது ட்ரைைய வைத்­தி­ருந்தார். 

இத­னை­ய­டுத்து கண்டி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஒன்றின் மூலம் ரத்­வத்த தனது தரப்­புக்கு மேலும் 3 புள்­ளி­களை சேர்த்துக் கொடுத்தார். 

முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்­திய கண்டி கழகத்­திற்கு இரண்­டா­வது பாதியில் கடும் சவாலாக விளங்­கி­யது ஹெவ்லொக் கழகம்.

இத­னை­ய­டுத்து ஹெவ்லொக் அணியின் விஸ்­வ­ரூப ஆட்டம் ஆரம்­ப­மா­கி­யது. ரீசா முபாரக், தாபரே போன்­றோரின் உத­வி­யோடு ஹெவ்லொக் அணிக்கு மிகவும் தேவை­யாக இருந்த அவ்­வ­ணியின் முதல் ட்ரை சூரி­யா­ரச்­சி­யினால் பெறப்­பட்­டி­ருந்­தது. 

சில நிமி­டங்­களில் முதல் பாதியில் புள்­ளி­களே பெறாத ஹெவ்லொக் கழகம் இரண்டாம் பாதியில் அபா­ர­மாக ஆடி கண்­டியின் புள்­ளிகள் எண்­ணிக்கையை நெருங்­கி­யது.

ஆனாலும் கண்டி தனது புள்­ளி­களை 30 வரை உயர்த்திக் கொண்டதால் ஆட்டத்தின் இறுதியில் 30–28 என்ற புள்ளிகள் அடிப்படையில் கண்டி கழகம் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35