தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து எடுக்கப்பட்ட முடிவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாசஸ்தலம் நோக்கிப் படையெடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்க வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியிடம் அனுமதி கோர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐ.தே.க அமைச்சர்கள் குழு  ஐனாதிபதி வாசஸ்தலத்திற்கு படையெடுத்துள்ளது.

தற்போது ஐ.தே.க. வின் அமைச்சர்கள் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.