அரசியல் நெருக்கடி ; மைத்திரி, ரணிலை சந்தித்தனர் இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதர் 

Published By: Priyatharshan

13 Feb, 2018 | 08:04 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ் )

நல்லாட்சி அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையையடுத்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  தரன்ஜித் சிங் சந்து  மற்றும்   அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். 

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவை  ஜனாதிபதி செயலகத்திலும்    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  அலரி மாளி்கையிலும்  இரண்டு தூதுவர்களும்  சந்தித்து   பேச்சு நடத்தியுள்ளனர். 

 

இன்றுகாலை    இந்திய  உயர்ஸ்தானிகர்   தரன்ஜித் சிங் சந்து    பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.  அத்துடன் மாலை   இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப்  அலரி மாளிகையில்   பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தினார்.      அதேபோன்று இரண்டு நாடுகளினதும்  தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  தனிப்பட்ட ரீதியில்   ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.  

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவின் பின் பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை  தீர்க்கும் நோக்கிலேயே   அமெரிக்க மற்றும்  இந்திய தூதுவர்கள்   பிரதமரையும் ஜனாதிபதியையும்   சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் சந்திப்புகள்   நீண்ட நேரம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40