தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலையைச் சார்ந்து, அதன் அடிவாரத்தில் இயங்கிவரும் ஈஷா தியான யோக மையத்தில் இவ்வாண்டும் மகா சிவராத்திரி நிகழ்வுகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன.

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சிகள் சற்று முன், சரியாக மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகின.

இந்த நிகழ்வு நாளை காலை ஆறு மணி வரை, அதாவது பன்னிரண்டு மணிநேரம் நடைபெறும். இதில், வழக்கம் போலவே ஆன்மீக நிகழ்வுகளுடன், ஆன்மீக உணர்வை ஊட்டும் வகையிலான கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வுகள், உங்கள் வீரகேசரி முகநூல் பக்கத்திலும் நேரலையாக தொடர்ந்து நாளை காலை ஆறு மணி வரை ஒளிபரப்பாகின்றன.

அதில் நீங்களும் இணைந்துகொள்ள:

https://www.facebook.com/virakesari/videos/10160363096350019/

நன்றி: ஈஷா தியான யோக மையம், கோவை