ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி சாரதி உட்பட ஐவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து இன்று  மாலை 4.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு வேகத்தை கட்டுபடுத்த முடியால் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் உள்ள மண் மேட்டு வங்கி ஒன்றில் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மேலதி சிகிச்சைக்காக மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது