தேசிய அரசாங்கத்தை மாற்றம் செய்வது தொடர்பில் பிரதமர் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுடன் பேச்சுவார்ததை நடத்திய பின்னர் தனது தீர்மானத்தை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பு நேற்றிரவு 9.30 மணியளவில் ஆரம்பித்து குறைந்தது 2 மணித்தியாலங்கள் நீடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கட்சி அங்கத்தவர்களுடன் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானத்தை ஜனாதிபதியிடம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.