இலங்கையின் முன்னணி வலைத்தளங்களில் ஒன்றாக திகழும் Lanka Property Web.com ஆனது தங்களது குடியிருப்புத் திட்டங்கள் தொடர்பான கண்காட்சியை வெற்றிகரமாக 2 ஆவது தடவையாகவும் இம்மாதம் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் இவ்வலைத்தள முகாமைத்துவப் பணிப்பாளர் தஹம் குணரட்ன கருத்து தெரிவிக்கையில், 

கடந்த ஆண்டை விட சிறப்பாக சற்று வித்தியாசமான முறையில் இந்த ஆண்டு எமது கண்காட்சியானது நடைப்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் 20ற்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பங்கேற்கவுள்ள அதேவேளை சொத்துக்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான பங்குதாரர்களும் பங்குபற்றவுள்ளனர். 

குறிப்பாக பிரதானமான 3 வங்கிகளும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் 10 மில்லியனிலிருந்தான விலைகளில் மனைகளை பார்வையிட முடியும். பேர்ச்சஸ் ஒன்றின் விலை ரூ.85,000 முதல் காணிகள் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை வங்கிக்கடன்கள் போன்ற மேலதிக வசதிகளும் நிறுவனத்தினரால் செய்துதரப்படும். ஒரு இலட்சம் செலுத்தி முன்பதிவுகளை செய்து கொள்ளலாம். இம்முறை 1 மில்லியின் பெறுமதியான தளபாடங்களும் இலவச விமான டிக்கட்டுகளும் பரிசில்களாக காத்திருக்கின்றன.

Lanka Property Web.com ஆனது கடந்த 11 வருடங்களில் மனைகள் மற்றும் ஏனைய சொத்துக்களை கொள்வனவு செய்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கி வருவதோடு இலங்கையின் பிரதான சொத்துரிமை இணையத்தளமாக திகழ்கின்றது.

இக்கண்காட்சியானது சொத்துரிமையாளர்களுக்கு சிறந்ததொரு தளமாக அமைவதோடு அங்கிருக்கும் சிறப்பு நிபுணர்களின் இலவச ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

Lanka Property Show 2018ன் உத்தியோகப்பூர்வ வங்கிப் பங்காளர்களாக Standard Charted வங்கி, நேசன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, செலான்  வங்கி மற்றும் மேலும் பல வங்கிகள் செயற்படவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதான பங்காளராக Capital Twin Peaks மற்றும் பிளாட்டினம் பங்காளராக Prime Grand மற்றம் Blue Ocean இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு www.lankapropertyweb.com/events என்கின்ற இணையத்தள முகவரியினைப் பார்வையிடவும்.