மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் எடுக்கமாறு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அனுமதியளித்தார்.

குற்றவியல் விசாரணை திணைக்களம் குறித்த இருவரிடமும்  எதிர் வரும் 13,14 மற்றும் 15 ஆம் திகதிகளி்ல் வாக்குமூலம் பெற ஒத்துழைப்பு வழங்குமாறு வெலிகடை சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு உத்தரவொன்றும் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.