அமெரிக்காவில் நட்சத்திர  விடுதி அறைகளில் பணிபுரியும் ரோபோ வாடிக்கையாளர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று அவர்களது தேவைகளை பூர்த்தி செய்கிறது.

அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள "அலோப்ட் குபர்டினோ" நட்சத்திர  விடுதியில் 3 அடி உயர தானியங்கி ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 40 கிலோ எடையுள்ள "போட்லர்" என்ற ரோபோ பல விதமான உணர்வுகள் கொண்டது. ‘3டி’ கமெராக்கள் மற்றும் ‘வை-பை’ வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ விடுதியில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் போத்தல்கள், மைக்ரோவேவ் பொப்கான், குழந்தைகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பணிபுரிகின்றன.

இதை பல விடுதிகளும் பின்பற்ற தொடங்கி விட்டன. 

லோஸ்ஏஞ்சல்ஸ் நட்சத்திர விடுதியில் ‘ஹன்னா’ என பெயரிடப்பட்ட ‘ரோபோ’ பணியாற்றி வருகிறது. அறைகளில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. 2.7 கி. மீட்டர் வேகத்தில் நடந்து சென்று அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு சேவை செய்கிறது.

‘தி ஷெராடன்’ லோஸ்ஏஞ்சல்ஸ்கான் கேபிரியல் என்ற நட்சத்திர விடுதி விரைவில் திறக்கப்பட உள்ளது. இங்கு 8 ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது.

அதில் ஒரு ரோபோ முதல் மாடி அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். மீதமுள்ள 7 ரோபோக்கள் அறைகளுக்கு சென்று பணிபுரியும்.

இதுபோன்று நிவேடா, லாஸ்வேகாஸ் உள்ளிட்ட நகரங்களில் விடுதி அறைகளில் பலவிதமான ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.