கொழும்பு மாந­க­ர­ச­பையின்   முதல் பெண் மேய­ராக  ரோஸி  சேன­நா­யக்க  பத­வி­யேற்­க­வுள்ளார். கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில்  ஐக்­கிய தேசி­யக்­கட்சி   1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று 60 ஆச­னங்­களை  தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

 110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மாந­க­ர­ச­பையில் 60 உறுப்­பி­னர்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெற்­றுள்­ள­மை­யினால் தனித்து ஆட்சி அமைக்­கக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆனால்  ரோஸி சேன­நா­யக்­கவை மேய­ராகக் கொண்ட  நிர்­வாகம்  அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. 

 இந்தத் தேர்­தலில்  பொது­ஜன பெர­முன 60 ஆயி­ரத்து 87 வாக்­கு­களைப் பெற்று  23  உறுப்­பி­னர்­க­ளையும்   ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 31 ஆயி­ரத்து 421 வாக்­கு­களைப் பெற்று  12 உறுப்­பி­னர்­க­ளையும்  பெற்­றுள்­ளன.  அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான  ஒருங்­கி­ணைந்த முற்­போக்கு கூட்­டணி 27 ஆயி­ரத்து 168  வாக்­கு­களைப் பெற்று 10 உறுப்­பி­னர்­களை   தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

இதில் தொகுதி ரீதி­யாக  வெள்­ள­வத்தை  பாமன்­கடை மேற்கு   தொகு­தியில் போட்­டி­யிட்ட  பி. பாஸ்­கரா  வெற்­றி­பெற்­றுள்ளார்.  மேயர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட  சண் குக­வ­ரதன்  சொற்ப வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார்.   இருந்­த­போ­திலும்   விகி­தா­சார  பட்­டியல் அடிப்­ப­டையில்   9 ஆச­னங்­களைப் பெற்று மொத்­த­மாக 10 உறுப்­பி­னர்­களை  முற்­போக்­குக்­கூட்­டணி தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. 

மக்கள் விடு­தலை முன்­னணி 14 ஆயி­ரத்து 234 வாக்­கு­களைப் பெற்று  6 ஆச­னங்­களை  கைப்­பற்­றி­யுள்­ளது.  நவோ­தய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் எஸ். கே. கிருஷ்ணா தலை­மையில் போட்­டி­யிட்ட சுயேச்­சைக்­குழு 2 ஆனது 4833 வாக்­குக்­களைப் பெற்று 2 உறுப்­பி­னர்­களை  பெற்­றுள்­ளது.  இலங்கை தொழி­லாளர்  காங்­கி­ர­ஸுடன் இணைந்து  போட்­டி­யிட்ட ஜன­நா­யக  மக்கள் காங்­கிரஸ் அணி 2853 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும்   இலங்கை தேசிய சக்தி   3251 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும்  நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி 2771 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் ஐக்­கிய தேசிய  சுதந்­திர முன்­னணி 1380  வாக்­கு­களைப் பெற்று   1 ஆச­னத்­தையும்  கைப்­பற்­றி­யுள்­ளன. 

 ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில்  கொட்­டாஞ்­சே­னையில் போட்­டி­யிட்ட  மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர்  ராமின்  புதல்­வ­ரான ஜோன் ராம் வெற்­றி­பெற்­றுள்ளார்.  இதே­போன்று காயத்­திரி விக்­கி­ர­ம­சிங்க  வெற்­றி­வாகை சூடி­யுள்ளார்.  வெள்­ள­வத்­தையில்  போட்­டி­யிட்ட திரு­மதி  அமிர்­தாம்­பிகை கோபாலன்,  பிர­ணவன்  ஆகி­யோரும் வெற்­றி­பெற்­றுள்­ளனர். 

பாமன்­கடை மேற்குத் தொகு­தியில்    ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில்  போட்டியிட்ட ஊடகவியலாளர்  உமாசந்திர பிரகாஷ், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாளரும்  முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்தத்  தொகுதியிலேயே   ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட பாஸ்கரா வெற்றிபெற்றுள்ளார்.