2020 ஆம் ஆண்டு வரை  தொடர்ந்தும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­ சிங்க தெரி­வித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்தல் முடி­வு­களை அடுத்து பிர­தமர்  ரணில்  விக்­கி­ர­ம­சிங்க   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்று அல­ரி­மா­ளி­கையில்  ஆலோ­சனை நடத்­தினார்.  இந்த சந்­திப்­பின்­போதே   பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். 

தேர்தல் முடி­வுகள்  தேசிய அர­சாங்­கத்­திற்கு  வழங்­கி­யுள்ள  செய்­தியை அவ­தா­னத்தில் எடுத்­துக்­கொண்டு எதிர்­வரும் நாட்­களில் சில­பல மாற்­றங்­களை   ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான   முடி­வு­களை எடுக்­கலாம். ஆனாலும்    நல்­லாட்சி அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்டு பத­விக்­காலம் பூர்த்தி ஆகும்வரை   முன்கொண்டு செல்வோம் என்றும் பிரதமர்   தெரிவித்துள்ளார்.