ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ வான்பரப்பில் பயணிகள் விமானமொன்று வெடித்துச் சிதறியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. 

அனைவரும் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமான பாகங்கள் விழுந்த இடம் குறித்தும், உயிருடன் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றது.

இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் என்பதுடன் ஏனைய 6 பேர் விமான ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.