இந்திய அணிக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வெல்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

பிங் சீருடையில் விளையாடிய6 ஆவது ஒருநாள் போட்டியை தொடர்ச்சியாக தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளில் இந்திய அணிவெற்றிபெற்று 3-0 என முன்னிலைபெற்றிருந்த நிலையில், 4 ஆவது போட்டி நேற்று தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்கில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்களி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களைப்பெற்றது.

இந்திய அணி சார்பில் ஷிகர் தவான் 109 ஓட்டங்களையும் விராட் போலி 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபடா மற்றும் நகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்திய அணி 34.2 ஓவர்களில் இந்திய அணி துடுப்பெடுதாடும் போது மழைகுறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது.

இந்நிலையில் 290 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி தென்னாபிரிக்க அணி ஒருவிக்கெட்டை இழந்து 43 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது.

இதையடுத்து டக்வெல்த்  லூயிஸ் முறைப்படி 28 ஓவர்களுக்கு 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப்பெற்ற தென்னாபிரிக்க, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரில் 1-3 என்ற நிலையிலுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 5 ஆவது போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.