வெளியிடப்பட்டுவரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் படி மஹிந்த ஆதரவு அணியான பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப்பெற்று முன்றிலையிலுள்ளது.

இதுவரை முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரேதச சபை காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகரசபை மற்றும் மாத்தறை மாவட்டம் கிருந்த புகுல்வெல்ல பிரதேச சபை ஆகியவற்றின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியான பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப்பெற்று முன்னிலையிலுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி 13 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.